சாய்ந்தமருதில் நவம்பர் எழுச்சியைத் தொடர்ந்து இறுதிப் புரட்சி!!!

சாய்ந்தமருது மக்கள் கோரி நிற்கும் அவர்களை அவர்களே ஆளநினைக்கும் உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்னிறுத்தி முன்னெடுக்கும் போராட்டங்களில் ஒரு அங்கமாக இறுதிப் புரட்சி (Final Revolution) என்ற போராட்டத்தை 2019-03-15 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தனர்.

ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பள்ளிவாசலின் முன்னால் இருமருங்கிலும் நின்றவாறு அணிவகுத்து நின்றனர்.
பின்னர் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, குறித்த தங்களது போராட்டமானது இன்றோடு நிறைவடையும் போராட்டம் அல்லவென்றும் இது கல்முனை மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் போலிவாக்குறுதிகளை வழங்கி அவர்களது வாக்குகளைச் சூறையாடி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்பதை அழுத்தும் போராட்டமே இது என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்கள் புதிதாக ஒன்றைக் கோரவில்லை என்று தெரிவித்த ஹனிபா, ஏற்கனவே இருந்த ஒன்றையே கோருவதாகவும் தெரிவித்தார். அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை மலினப்படுத்தவேண்டாம் என்றும் இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டு அபிவிருத்தி மட்டுமல்ல தங்களது அரசியலையும் தாராளமாக செய்யலாம் என்றும் சாய்ந்தமருது மக்கள் 20000 வாக்குகளையும் தருவார்கள் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்கள் மிகவும் பண்பானவர்கள் என்றும் அவர்களது உணர்வுகளுடன் உரசிப்பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். போலிவாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட பல ஊர் மக்கள் தங்களுடன் உரையாடிவருவதாகவும் அவர்களையெல்லாம் இணைத்துக்கொண்டால் அம்பாறையில் தங்களால் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -