இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க்றிஸ்சர்ச்சில் உள்ள மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசலிலும், லின்வுட்டில் உள்ள பள்ளிவாசலிலும் இந்த தாக்கதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற போது குறித்த பள்ளிவாசல் ஒன்றில் பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு அருகில் சென்றிருந்தனர்.எனினும் அவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இந்த தாக்குதல் தீவிரவாத பின்னணி கொண்டதா? என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எவையும் வெளியாகவில்லை.
அதேநேரம் தாக்குதல் அச்சுறுத்தல் இனி இல்லை என்று கூற முடியாது என க்றிஸ்ட்ச்சர்ச் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிராந்தியத்தின் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. இந்த நாள் நியுசிலாந்தின் கறுப்பு நாளாக பார்க்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.