குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கொரிய தூதுக்குழு ஆராய்வு

பாறுக் ஷிஹான்-
குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கொரிய தூதுக்குழு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளது.
இன்று (26) முற்பகல் கொரிய தூதுக்குழு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்ததுடன் பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடியது.
இதன் போது கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் தூதுக்குழுவினருடன் நல்லாட்சிக்கான புத்தாக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் உட்பட குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
இதன்போது சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமுத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் குறித்தும் ஆராயபட்டது.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -