பாலர் பாசாலை வித்தியாரம்பம்

பி. முஹாஜிரீன்-
சின்னப்பாலமுனை சீட்ஸ் இஸ்லாமிய சர்வதேசப் பாடசாலையில் இவ்வாண்டு அனுமதிபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் 'வித்தியாரம்ப விழா' நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை சீட்ஸ் அமைப்பின் தலைவர் எஸ்.எச். தம்ஜீத் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பாலர் பாடசாலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய மாணவர்கள் மாலை அணிவித்து, சின்னம் சூட்டி வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றதுடன், பாலர் பாடசாலைக்கு உள்வாங்கப்படும் சிறார்களின் பெற்றோருக்கு பாலர் கல்வி தொடர்பான கலைத் திட்டம் பற்றிய தெளிவூட்டலும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில் பிரதம அதிதியாகவும், பாலமுனை அல் ஹிக்h வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.உதுமாலெவ்வை, பாலர் பாடசாலைப் பணியக உத்தியோகத்தர் எம். ஹபீல், கிராம நிலதாரி ஐ.எல்.எம். முனாஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஜி. அஸ்மின், கே.எம். மொகிடீன், பாலமுனை எஸ்.ஆh.சி. அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். அன்சார், ஹில்ப் சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் எம்.ஜே.எம். றிஸ்வான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம். ஹூஸைர், ஆசிரியர் எம்.எச். நிஸார்தீன் உட்பட பாலர் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -