தரமற்ற தலைக்கவசங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்படும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களினாலேயே ஏற்படுகின்றன. இதன் விளைவாக, உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண்கின்றோம். எனவேதான், இவ்வாறான தலைக்கவசங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா - பண்டாரநாயக்க வித்தியாலயத்தில், வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.