சீன அரசின் சுமார் 534மில்லியன் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டிடம்

எஸ்.அஷ்ரப்கான்-
சீன அரசின் சுமார் 534மில்லியன் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைத் தொகுதிக்கான நவீன கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த வைத்தியசாலைத் தொகுதிக்கான கட்டுமான ஆரம்ப நிகழ்வும், குருதி சுத்திகரிப்பு பிரிவு திறப்பு விழாவும் நேற்று (10) வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் ரீ.ஆர்.எஸ்.ரீ.ஆர். ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார, போசணைகள், சுதேச வைத்தியதுறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும், சுகாதார, போசணைகள், சுதேச வைத்தியதுறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் கௌரவ அதிதியாகவும். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் விசேட அதிதியாகவும் கலந்துசிறப்பித்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசீத், உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -