யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேற்றிரவு(20) கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் கோடரி போன்று கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடாத்துயிருந்தது. இதன் போது அங்கிருந்த வாகனங்களும் எரித்து நாசம் செய்யப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் யாழ் மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள்கள் கோடரிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
விசேட குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் கோப்பாய் பொலிஸாரும் ஒப்படைத்துள்ளனர். இதற்கமைய நீதி மன்றில் துற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.