கடந்த 2010-ம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் இருந்து இன்றுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் கருணா அவர்கள் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார், இந்த தகவல்கள் எந்தளவு உண்மை என்பது கேள்விக்குறி?
சில தினங்களுக்கு முன்னர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட அவர் பல தகவல்களை வெளியிட்டுயிருந்தார்.
அதில் முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்கள் துரோகிகள் என்றும் அவர்களை கொலை செய்ய தலைவர் பிரபாகரன் உத்தரவிட்டதாகவும், முக்கியமாக குறித்த கட்சியின் தலைவர் சம்மந்தனை கொலை செய்ய அவர் முடிவெடுத்திருந்தாகவும், அந்த நேரத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் நல்லுறவு இருந்ததனடிப்படையில் தலைவர் பிரபாகரனிடம் சம்மந்தனை மன்னித்துவிடுமாறு மாவை கேட்டுக்கொண்டதாகவும் குறித்த நேர்காணலில் கருணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.ஐபிசி