இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்டார் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு மாதம்பை முஸ்அப் காமில் தெரிவு


மினுவாங்கொடை நிருபர்-
லங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கட்டாரில் இயங்கிவரும் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு, மாதம்பையைச் சேர்ந்த முஸ்அப் காமில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், மாதம்பை அல் - மிஸ்பாஹ் பாடசாலையின் பழைய மாணவராவார்.
பாடசாலைக் காலங்களிலேயே கால்பந்தாட்டப் போட்டிகளில் தேசிய ரீதியில் தனது திறமைகளை வெளிக்காட்டி, தனது ஊருக்கும் அல் மிஸ்பாஹ்வி்ற்கும் பெருமை சேர்த்தவர் என்பதுடன், பல விருதுகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்டியுள்ளவுமாவார்.
இவரின் அபாரத்திறமையினால், மலேசியாவுக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளுக்கும் இவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு முன்னர் மாதம்பையைச் சேர்ந்த பஸால் அஸ்கர், இதே அணிக்காக விளையாடியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -