நாளை நிந்தவூர் பிரதேசத்தில் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் விழாவும், பொதுக் கூட்டமும்


எம்.எம்.ஜபீர்-நிந்தவூர் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டம் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் முயற்சியினால் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் நிதி ஒதுக்கீட்டில் 115 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் விழாவும், பொதுக் கூட்டமும் நாளை சனிக்கிழமை மாலை 3 மணியலவில் நிந்தவூர் கருத்தக்கண்ணர் சந்தியில் இடம்பெறவுள்ளது.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமையாளர் கலன்சூரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -