எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை வீரத்திடல் மபாஸா மத்ரஸா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மௌலவிகள், உலமாக்கல், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
சவளக்கடை வீரத்திடல் மபாஸா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது மபாஸா மத்ரஸாவில் மார்க்க கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பரிசளிப்பும் இடம்பெற்ற இதேவேளை பிரதேசத்திலுள்ள மௌலவிகள், உலமாக்கள், சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி ஏ.சீ.தஸ்தீக் மதனி, சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர், அம்பாரை மாவட்ட தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகத்தர் எம்.எம்.ஜீ.வீ.எம்.றஷாட், நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ஆர்ஷாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நஸார் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.