மாணவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் -ஜனாதிபதிக்கு சுபைர் கடிதம்

எஸ்.அஷ்ரப்கான்-

ரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அமையம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அமையத்தின் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாாகண அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் மேற்படி கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை நேற்று (30) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வரலாற்று சிறப்பு மிக்க குறித்த தூபியின் மீதேறி, அதனை அவமதிப்புக்குள்ளாக்கியதாக தெரிவித்து, கிரலாகல இடத்துக்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரிகள், ஹொரவபொத்தான பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினையடுத்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் அநுராதபுரம் ஹொரவபொத்தான கிரலாகல தூபி மற்றும் அங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிடும் பொருட்டு, சுற்றுலா சென்றபோது அங்குள்ள தூபி மீதேறி புகைப்படங்களை எடுத்து சமூக வலையத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். குறித்த சம்பவமானது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கிரலாகலவிற்குப் பொறுப்பான தொள்பொருளியல் திணைக்கள அதிகாரி, தொல்லியல் இடத்தில் அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் எடுத்தமை சம்மந்தமாக ஹொரவபொத்தான பொலிசில் முறைப்பாடு ஒன்றினை செய்ததற்கமைவாக, குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க குறித்த தூபியினை பார்வையிடச் சென்ற அந்த மாணவர்களுக்கு புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கான சரியான வழிகாட்டல், அறிவுறுத்தல்கள் என்பன அச்சமயத்தில் இல்லாமையினாலும், தூபியில் ஏறி புகைப்படம் எடுப்பது தொல்லியல் இடத்தை அவமானப்படுத்தும் செயல் என்பதனை அறியாததன் காரணமாகவும் அவர்கள் அந்த தவறினை செய்துள்ளனர்.

செல்கின்ற இடமெல்லாம் செல்பி எடுக்கும் புதிய கலாச்சாரமொன்று இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே ஆட்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என நாம் என்னுகிறோம். குறிப்பாக சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் குறித்த தொல்லியல் இடத்தை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வதற்கு வாய்ப்பில்லை. என்பது வெளிப்படையான உண்மையாகும்.

குறிப்பாக, இலங்கை தாய் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்த நாட்டை அளவு கடந்து நேசிக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கை திருநாட்டின் அனைத்து மதங்களையும், கலாச்சாரங்களையும் மதிக்கின்றவர்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டிக்கொடுக்காதவர்கள். அந்தவகையில், பல்கலைக்கழக பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கின்ற எமது மாணவர்களிடம் பிற கலாச்சாரங்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

குறித்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்விபயிலும் மாணவர்கள் கிரலாகல பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான புராதன தூபியில் ஏறி தொல்லியல் இடத்தில் அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் எடுத்தமை சம்மந்தமாக தாம் மிகுந்த மன வேதனையடைவதுடன், தமது அறியாமையனால் செய்த தவறுக்காக அவர்களை கைது செய்துள்ளமை எமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர்கள் முற்றிலும் அறியாமல் செய்த குற்றத்திற்காக சிறைக்கைதிகளாக அழுது கொண்டிருக்கிறார்கள். அவா்களின் பெற்றோர்களும், செய்வாதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .

எனவே நாட்டினுடைய தலைவர் என்ற வகையில், குறித்த மாணவர்கள் அறியாமல் செய்த தவறினை மன்னித்து, அவா்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் எதிர்காலம் கருதி பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -