சிங்கப்பூர் முதலீட்டாளர்களை வழி அனுப்பி வைத்தார் கிழக்கு முன்னால் ஆளுனர் ரோஹித



ஹஸ்பர் ஏ ஹலீம்-

சிங்கப்பூர் நாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் குழுவினர் இரு நாட்கள் விஜயம் ஒன்றை கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அவர்களின் தலைமையிலும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தக்சிதபோகொல்லாகம அவர்களின் பங்குபற்றலுடனும் நடை பெற்ற கிழக்கு மாகாண முதலீடுகளை கொண்டு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டன .

கிழக்கின் சுற்றுலா , மீன்பிடி, வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொண்டு வருவதற்கான ஒரு விஜயமாகவும் இது அமைந்தது.

4,5 ஆகிய இரு தினங்கள் சிங்கப்பூர் நாட்டு முதலீட்டாளர்கள் திருகோணமலையில் தங்கியிருந்து பல இடங்களுக்கு களவிஜயங்களிலும் சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்கள்.

இன்றைய தினம் (06) சிங்கப்பூரை நோக்கி VP-CPY என்ற விமானத்தில் வருகை தந்த முதலீட்டாளர்களில் ஒருவரின் சொந்த விமானத்தில் சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டார்கள்.

கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான குழுவினர் இதன் போது முதலீட்டாளர்களை சீனக்குடா விமான நிலையத்தில் வைத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

சர்வதேச விமானம் ஒன்று இன்றைய தினமே சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற் தடவையாக சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -