கல்முனை அம்மன் கோவில் மற்றும் குவாரி வீதிகளுக்கிடையிலான 100 மீற்றர் நீளமான குறுக்கு வீதி வடிகானில் மண் மற்றும் குப்பைகள் அடைத்து இருந்ததனால் மழை நீர் வடிந்தோடாமல் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அத்தோடு நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயமும் காணப்பட்டது இதனை கருத்தில் கொண்டும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் கல்முனை நியுஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களால் வடிகான் சுத்தகரிப்பு பணியினை நேற்று மேற்கொண்டிருந்தனர்.
இதில் கழக உறுப்பினர்களும் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் பங்குபற்றியிருந்தனர்.
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட தமிழ் கிராமங்களின் பல இடங்களில் இவ்வாறு வடிகான்கள் மண்களாலும் குப்பைகளாலும் மூடப்பட்டு நீர் வடிந்தோடாது காணப்படுகின்றது பொதுமக்கள் கல்முனை மாநகரசபையிடம் அறிவித்திருந்தும் பல இடங்களில் நடடிவக்கை எடுக்கபடாதுள்ளதாகவும் மாநகரசபை இந்த வடிகான்களை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.