ஒருசில விசக்கிருமிகளின் துரோகத்தனத்திற்கு அஞ்சமாட்டோம்!
ஜல்லிக்கட்டு விழாவில் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சூளுரை!
காரைதீவு சகா-இலங்கைப்பாராளுமன்றத்தில் ஏன் முழு இலங்கையிலும் ஜனநாயகத்தைக்
காப்பாற்றிய பெருமை எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையே சாரும்.
அப்படிப்பட்ட அணியிலுள்ள நாம் ஒருசில விசக்கிருமிகளின் துரோகத்தனத்திற்கு அஞ்சமாட்டோம்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின்கீழள்ள
காரைதீவுபிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
2019ம் ஆண்டினை வரவேற்கும் முகமாக காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர்
அமைப்பின் ஏற்பாட்டில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக
காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றபோது பிரதம
விருந்தினராகக்கலந்துகொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு சூளுரைத்தார். இப்போட்டியானது ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் அ.விஷிகரன் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுப்போட்டியில் வெற்றிவாகை சூடிய பில்லா அணியினருக்கு
வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்துப் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: உலகம்போற்றும் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவீகள் பிறந்த இந்தகாரைதீவு மண்ணின் பெருமை அவர்களால் எடுத்தியம்பப்பெற்றுள்ளது. வீரம் விளைந்த கல்வியூராம் எமது வளம்கொழிக்கும் காரைதீவு மண்ணில் இணைஞர்கள் இவ்வாறு எமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு மூலம் போட்டியைநடாத்தி இளைஞர்களை ஒன்றுசேரவைத்திருப்பதுகண்டு அதன்தலைவர் விசிகரனையும் குழுவினரையும் பாராட்டுகின்றேன்.
அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த எமது தாய்மண்ணில் இன்று புதிதாக முளைத்த
ஒருசில விசக்கிருமிகள் துரோகத்தினத்திலீடுபட்டுக்கொண்டு அறிக்கையும்
விடத்தலைப்பட்டுள்ளன.
காரைதீவின் நந்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைந்துள்ளனர். காரைதீவு மக்கள் படித்தவர்கள். இவர்களது அறைகுறைப்பருப்பு மக்களிடம் வேகாது. இவர்கள் யார் இவர்கள் செய்தசேவை என்ன? இதுவரை என்னசெய்தார்கள்? எம்மவரை அந்நியனிடம் காட்டிக்கொடுத்த துரோகத்தனத்தை மேற்கொண்டுவருகிறார்கள். அந்தத்துரோகத்தனத்தால் எம்மை முடக்கநினைக்கிறார்கள். ஒருபோதும் முடியாது.
இந்த கனகரெத்தினம் மைதானத்தை ஒளியூட்டுவேன் என்றார் ஒரு உறுப்பினர் . அதேவேளை மற்றொரு உறுப்பினர் ஒளியூட்ட பிரதேசசபையிடம் கேட்டதாகவும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றார்.
எதுஎப்படியிருந்தபோதிலும் நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து கனகரெத்தினம்
மைதானத்தை அபிவிருத்திசெய்வோம். என்றார். சுற்றுப்போட்டியில் முதலிடத்தை பில்லா அணியினரும் இரண்டாமிடத்தை சிங்கம்
அணியினரும் மூன்றாமிடத்தை புலிஅணியினரும் பெற்று
வெற்றிக்கிண்ணங்களைசுவீகரித்துக்கொண்டனர்.