மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக எச்.எம்.எம். ஹரீஸ் கடமையேற்பு.

அகமட் எஸ். முகைடீன், றியாத் ஏ. மஜீட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (27) வியாழக்கிழமை கொழும்பு யூனியன் பிலேஸில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி அரசியல் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவிருந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அண்மையில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார். அதற்கமைவாக அவ்வமைச்சுப் பொறுப்புக்களை இன்று காலை பொறுப்பேற்றார்.
இதன்போது கொள்ளுபிட்டி ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னாள் இமாமும் தாறுல் உலூம் அஸ்ஹரியா கலாசாலையின் பணிப்பாளரும் இலங்கை கதீப் மற்றும் முஅத்தின் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான மௌலவி அப்துல் ஜப்பார் அவர்களினால் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் உயர்அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸூக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -