மக்கள் வாக்கில் அதிகாரத்துக்கு வந்தவர்கள் திசைமாறக்கூடாது-பாயிசா நெளபல்


க்களின் வாக்குகளைப்பெற்று வந்த நாம் மக்களின் நலனையும் சிந்திக்க வேண்டும் -பிரதித்தவிசாளருக்கு பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நௌபல் பதிலடி
மக்களின் வாக்குகளைப்பெற்று வந்த நாம் மக்களின் நலனையும் சிந்திக்க வேண்டுமென கடந்த 25-10-2018ம் திகதி இடம்பெற்ற கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏழாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நௌபல் தெரிவித்தார்.
மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மீராவோடை பொதுச்சந்தையில் இடம்பெற்று வரும் வாராந்த சந்தை தொடர்பில் பிரதித்தவிசாளர் சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவு தொடர்பிலும் சபை அமர்வில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பிலும் பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நௌபலின் உருக்கமான ஆதங்கத்தினை பதிவு செய்திருந்தார்,

அன்றைய அமர்வில் உப தவிசாளர் அஹமட் மீராவோடையில் நடைபெறும் வாராந்த சந்தை தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஹ்மத் அங்கு கருத்துத்தெரிவிக்கையில்,
உணவுப்பொருட்களை வீட்டுக்கு கொள்வனவு செய்வதற்காகச்சென்ற போது, அங்கு பழுதடைந்த, காலவதியான மரக்கறிகள் விற்கப்படுவதாகவும், அதனால் நான் எதுவும் வாங்காமல் சென்றதாகவும் உடனே சுகாதார அதிகாரிகளை அங்கு அனுப்பி மரக்கறிகளை அகற்றவும் வியாபாரிகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் வேண்டும் கூறி இருந்தார்.
நாவலடியிலிருந்தும் மக்கள் வருவதைக்கண்டேன் இது மலிவு என்பதால் கொழும்புக்கு பாண் வாங்கப்போன கதைபோன்றுள்ளது என்ற கிண்டலாக கூறிய போது குறிக்கிட்ட பாயிஸா நௌபல், இது மீராவோடை மக்களுக்காக உருவாக்கப்பட்ட வாராந்த சந்தை இப்பிரதேசத்தில் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். இங்கு குறைந்த விலையில் தரமான பொருட்களை ஒரே இடந்தில் கொடுப்பதே இச்சந்தையின் நோக்கம். தரமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் என கருதும் பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதில் நான் தடையில்லை.

ஆனால், நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது. பொல என்பது ஒரு தியால வியாபாரமே. இதற்கு இரவோடு இரவாக லொறிகளில் மூட்டையாக மரக்கறிகள் வரும் போது, அதில் சிலது உடைந்தும் உரசுப்பட்டும் நசிந்தும் இருப்பதும் அதனை வியாபாரிகள் இரவோடு இரவாக தரம் பிரித்து விலைகளையும் தரப்படுத்தி விற்பதும் இயல்பே.இது நாட்டிலுள்ள சகல சந்தைகளின் நிலையும் இது தான். இது மீராவோடை சந்தைக்கு மட்டும் புதிதல்ல.
எனவே, 11 மணியானால் நீங்கள் தரமற்றதெனக்கருதும் மரக்கறியும் விற்கப்பட்டுத்தான் போகிறது. அதையும் மக்கள் தான் வாங்குகின்றனர். யாரும் யார் கண்களையும் கட்டி வியாபாரம் பண்ணவில்லை. நல்ல பொருட்களை வாங்க வேண்டியது நுகர்வோரின் கடமையாகும்.

இவ்வளவு பெரிய வாராந்த சந்தையில் ஒரு பொருளும் கொள்வனவு செய்து கொள்ள முடியாதளவுக்கு அங்குள்ள எந்த நல்ல பொருட்களும் உங்கள் கண்களுக்கு தெரியல்லையா? நீங்கள் வாராந்த சந்தைக்குச் சென்று அங்கு உங்கள் பார்வைக்கு தரமற்ற பொருட்கள் எனக்கருதும் பகுதிக்குச்சென்று அதனை புகைப்படமெடுத்து அதனை உங்கள் முகநூலில் பதிவிட்டு, அதற்கெதிராக மக்களின் காரமான எதிர்ப்புக் கருத்துக்களையும் நானும் பார்த்தேன்.
எனக்கு அங்கு பதில் சொல்ல முடியாமலில்லை. கடந்த மாதம் இவ்வாராந்த சந்தை விடயமாக பாரிய பிரச்சினை ஏற்பட்டு ஒரு சுமுக நிலை வந்தமை சகலருக்கும் தெரியும், இந்நிலையில் நீங்கள் சபை ஒழுங்கு மீறிச்செயற்பட்டது மல்லாமல், மீண்டும் இன்று சபையில் இதனைக்கொண்டு வந்து பேசும் போதும் மௌனமாக இருந்து போக என்னால் முடியாது. அதனாலே நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது எனத்தெரிவித்தார் பாயிஸா நௌபல்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
அவரவர் வசதி தரத்திற்கேற்ற கொள்வனவு செய்யும் உரிமை அவர்களுக்குண்டு. இதே போல தான் இவ்வாராந்த சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நிலையும் உள்ளது. மீராவோடை வாராந்த சந்தை விடயத்தில் தயவு செய்து மனித நேயத்தோடு செயற்படுங்கள். இங்கு மீராவோடை மட்டுமல்ல. சகல ஊர்களிலிருந்தும் வந்து பொருட்களை விற்கவும் வாங்கவும் முடியும். யாருக்கும் இங்கு தடையில்லை. எல்லோருக்கும் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நௌபல் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -