கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பல மாதங்களாக கவனிப்பாரற்று காணப்படும் வாகன தடுப்பு வேலியினால் அவ் வீ தியின் போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலை ஏட்படுத்திவருவதாக பிரதேச மக்கள் முறையிடுகின்றனர்.
கல்முனையில் காணப்படும் உள் வீதிகளில் பிரபலமானதும் பெரிய வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகவும் உள்ள கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலேயே இக்குறித்த இரும்பினால் ஆன வாகன தடுப்பு வேலி இடப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலை ஏட்படுத்திவரும் வாகன தடுப்பு வேலியினை அகற்றுவதற்கு கல்முனை மாநகர முதல்வர் முன்வர வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகின்றனர்.
