ஜீனஸ் 7 கௌரவிப்பும் யேடுகள் வழங்கும் நிகழ்வும்

எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது ஜீனஸ் 7 கௌரவிப்புப் பிரிவு ஒழுங்கு செய்திருந்த சர்வதேச டியுக் எடின்பேக்ஸ் கௌரவிப்பிற்கானகையேடுகள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கழமை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு துறைஅதிகாரியுமான இஸட்.எம்.ஸாஜித் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்எம்.எம்.மயோன் முஸ்தபா பிரதம அதியாகவும் , அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சேவைகள் மன்ற பிரதி பணிப்பாளர்எஸ்.எம்.ஏ.லத்தீப் , முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத் , சாய்ந்தமருது தொழில் பயிற்சிநிலைய பொறுப்பதிகாரி எம்.எம். உதுமாலெவ்வை , சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , சாய்ந்தமருது 7 ஆம் பிரிவுகிராம சேவக உத்தியோஸ்தர் எம்.சி.பாறூக் , இளைஞர் சேவைகள் அதிகாரி பீ.எம்.றியாத் , ஜீனஸ் 7 பிரிவின் உதவிதலைவரும் பேரதெனிய பல்கலைக்கழக பொறியியல் புிட மாணவருமாகிய ஏ.எம்.அப்ஸால் இலாஹி , ஆசிரியர்களானஎச்.எம்.ஸிரோஸான் , ஏ.ஜி.எம்.அப்ரத் , கணக்காளர் ஹில்மி சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 87 இளைஞர்களுக்கு சர்வதேச டியுக் எடின்பேக்ஸ்கௌரவிப்பிற்கான கையேடுகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதோடு முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்எம்.எம்.மயோன் முஸ்தபா ஏற்பாட்டு குழுவினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கியும்கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி நிகழ்வுகளை ஏ.எம்.ரோஸான் தொகுத்து வழங்கினார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -