பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கணக்காளர்களுக்காக சர்வதேச மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மூன்று வார கால வதிவிட செயலமர்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் நாளை மறுதினம் சீனா பயணமாகிறார்.
சீனாவின் பீஜிங் நகரில் ‘நிதி முகாமைத்துவமும் பொருளாதார அபிவிருத்தியும்’ எனும் தொனிப்பொருளில் இம்மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது.
இந்த செயலமர்வில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 15 கணக்காளர்களுள் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் அவர்களும் ஒருவராவார். இச்செயலமர்வில் பல நாடுகளில் இருந்தும் கணக்காளர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.