அப்படியொரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அரசியல் உயர்மட்டங்களில் இருந்து அறிய முடிந்தது.
நாளை பாராளுமன்றம் கூடும் முன்னர் இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிடக் கூடுமென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி எம் பிக்களை சந்தித்த ஜனாதிபதி மைத்ரி , தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் அது தொடர்பில் உறுப்பினர்களின் அபிப்பிராயங்களையும் கேட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக இங்கு தெரிவித்துள்ள ஜனாதிபதி அதன் முடிவு விரைவில் அறிவிக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐ தே க தலைவர் ரணில் இன்னும் சற்று நேரத்தில் முக்கிய செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அறிய முடிந்தது.