தெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்?? வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்


நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க முற்பட்டதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த நாடாளுமன்ற காவற்துறையில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் கத்தி வைத்திருந்தாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுப்படுத்த நாடாளுமன்ற காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் போது கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் கத்தி போன்ற ஆயுதம் எடுத்து செல்லப்பட்டமையானது பிரச்சினைக்குரிய விடயம் என காவற்துறையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த கத்தி நாடாளுமன்ற உணவகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறை விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -