தலவாக்கலையில் தீ விபத்து - இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசம்

க.கிஷாந்தன்-லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பிரதான நகரில் 16.11.2018 அன்று அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கிரைண்டிங் மில் மற்றும் (பென்சி கடை) அழகு சாதான பொருட்கள் விற்பனை நிலையம் ஆகிய இரண்டு வியாபார நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொது மக்கள், தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -