17 இலட்சம் பேர் வாழ்கின்ற மக்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் 280 பேர் மாத்திரமே உள்ளனர்

பைஷல் இஸ்மாயில்-
ல்லா மாகாணங்களையும் விட கிழக்கு மாகாணம்தான் மிகப் பெரிய பிரதேசமாகும். இங்கையின் மொத்த பரப்பில் 6 இல் 1 கிழக்கு மாகாணத்தைச் சார்ந்ததாகஇருக்கின்றது. இதில் 17 இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்ற இந்த மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் 280 பேர் மாத்திரமே உள்ளனர் என்று கிழக்குமாகாண ஆளுநர் ரோஹித பொகல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 56 பாரம்பரிய வைத்தியர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாபெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாணஆயுர்வேத சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் (27) திருகோணமலை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மறக்கடிக்கப்பட்டு வருகின்ற பாரம்பரிய வைத்திய முறைகளை மங்கவிடாமல் அந்த வைத்திய முறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் உங்களுக்கு இன்று வழங்கப்படுகின்ற மருத்துவ உபகரணங்கள் மூலம் எமது மாகாணத்திலுள்ள மக்களுக்கு மிகச் சிறந்த வைத்திய சேவைகளை வழங்கி வைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த மருத்துவ உபகரணங்களை நாம் வழங்கி வைக்கின்றோம்.
இந்த வைத்திய உபகரணங்களைக் கொண்டு நீங்கள் செய்யப்போகின்ற விடங்களை அறிந்துகொள்வதற்கான ஒரு குழுவினர் வருவார்கள் அவ்வாறு வருகின்ற குழுவினர் மூலம் உங்களின் வைத்திய முறைகளை அளவிடும் ஒரு கணிப்பீடு ஒன்றையும் நாங்கள் நடாத்தவுள்ளோம். அது எவ்வாறாக இருக்கும் என்றால், நீங்கள் உங்களின் பிரதேசங்களில் செய்கின்ற வைத்தியங்கள், அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கின்ற நன்மைகள் போன்றவற்றை வைத்தே உங்களின் கணிப்பீடு இடம்பெறவுள்ளது. நீங்கள் உங்களின் அனுபவத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகின்ற வைத்தியங்கள் யாவும் ஒரு சேவையாகவே இடம்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தற்போது மக்களை ஆட்டிப் படைக்கின்ற ஒரு தொற்றா நோயாக சிறுநீரக நோய் காணப்படுகின்றது. பதவி சிறி புரத்தில் 10 இற்கு ஒருவர் வீதம் இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது பெரும் கவலையைத் தருகின்ற விடயமாகவுள்ளது. இந்த நோயினை இல்லாமல் செய்வதற்கோ அல்லது இந்நோய் ஏற்படாமல் இருப்பதற்கான ஒரு யோசினையை நீங்கள் முன்வைக்கலாம்.
நாம் உண்ணுகின்ற உணவின் மூலம் ஏதாவது மூலிகைகளை கலந்து சாப்பிடக் கொடுக்கலாமா? அல்லது பதார்த்தம் மூலம் கொடுக்கலாமா? அல்லது அதற்கு வேறு ஏதாவது பாரம்பரிய வைத்திய முறைகள் இருக்கின்றனவா? என்ற யோசினைகளையும், அதுதொடர்பான வைத்திய முறைகளை சமர்ப்பித்து ஒரு விரிவான கலந்துரையாடலை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதுடன் அதற்கு எவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றதோ அதனை செய்வதற்கான சகல வசதிகளையும் நான் செய்துதர தயாராகவுள்ளேன் என்றார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -