அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கூட்டு எதிரணி உறுப்பினர்களை சிறையில்அடைத்து வழக்குகளை விசாரணை செய்யும் இந்தநல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி மற்றும்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதிதொடர்பில் திட்டமிட்டதாக கூறப்படும் தீவிரவாததடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மாஅதிபர் நாலக சில்வா தொடர்பில்விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில்அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகிறது.
தன்னை கொலை செய்ய சதி செய்தமைதொடர்பில் மேற்கொள்ளப்படும்விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில்இதுவரை தனக்கு அறிக்கப்படவில்லை எனஜனாதிபதியே குறைப்படும் அளவுக்கு இன்று நிலமை இருக்கிறது.நாலக சில்வாவை விசாரணைசெய்யும் விதத்தில் இருந்தே இதன் பின்னனியில்பெரிய தலைகள் இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
நாமல் குமார என்பவர் வெளியிடும் தகவல்களைபார்க்கும் போது இந்த சதித்திட்டங்களின்பின்னால் இருப்பவர்கள் ஜனாதிபதியை மாத்திரம்கொலை செய்ய திட்டமிடவில்லை என்பதும் இன்னும் பல்வேறு சதி திட்டங்களைமுன்னெடுத்துள்ளார் என்பதும் புலனாகிறது.
நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராககலவரங்களை உருவாக்க எல் டி டி டயஸ்போராபணம் வழங்கியுள்ளமை மற்றும் அவர்களுடன்தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்பு பட்டுள்ளமைஎன்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
அன்று சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்துபிரிக்க சதி செய்த அதே பின்னனிதான் இந்த முழுதிட்டங்களினதும் பின்னால் இருக்க வேண்டும்.
அன்று அலுத்கமையில் அரங்கேற்றப்பட்டதிட்டமிட்ட கலவரம் தொடர்பில் நாம் பலமுறைகோரியும் விசாரணை மேற்கொள்ளாத இந்தஅரசாங்கத்தின் பங்காளிகளே மிக அண்மையில்நடந்த இனமோதல்களின் பின்னால் இருந்திருக்கவேண்டும்.
தற்போது மந்த கதியில் முன்னெடுக்கும்விசாரணைகளை முறையாக மேற்கொண்டால்திகன கலவரத்தின் பின்னால் இருக்கும் பிரதானசூத்திரதாரிகளை இனங்கண்டு கொள்ளமுடியும்என அவர் குறிப்பிட்டுள்ளார்.
