எம்.என்.எம்.அப்ராஸ்-
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம் அண்மையில் வெளியான புலமைப் பரிட்சையின் முடிவின் படி 21 மாணவர்கள் சித்தியடைந்து கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டத்தில் முதலாவதாகவும் கல்முனை வலயத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று இப் பாடசாலையின் வரலாற்றில் சாதனை புரிந்துள்ளது . இப் பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் அவரின் வழிகாட்டலில் இவ் பாடசாலை கல்வி மற்றும் இதர விடயங்கள் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப் பாடசாலையின் தரம் 5 கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் சிறந்த நெறிப்படுத்தல் காரணமாக இவ்வாரான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ் மாண்வர்களை கெளரவிக்கும் முகமாக பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்த ஊர்வலமொன்று நேற்று (12)
பிற்ப்பகல் 4.00 மணியலவில் இடம்பெற்றது இதில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்,பாடசாலை
மாணவர்கள், நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் பாடசாலையை இவ் முன்னேற்றகரமாக அமைய ஒத்துழைத்த அனைவருக்கும் பாடசாலை அதிபர் தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும் இப் பாடசாலையானது விரைவில் தனது 150வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.