தலவாக்கலை லிந்துலை நகரசபை மற்றும் தலவாக்கலை சபரி யாத்திரை குழு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் 6..10.2018 சனி;க்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்தியாவிலிருந்து வருகைத்தந்த வைத்தியக் குழுவினர் இலவச வைத்திய சேவைகளை வழங்கினர்.
இந்த மருத்துவ முகாமில் அக்குபஞ்சர், சித்த வைத்தியம், வர்மா, கப்பிங் தெரப்பி ஆகிய முறைகளில் தேவையான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் 1000 ற்கு மேற்ப்பட்ட மக்கள் வருகைத்தந்து மருத்துவ சேவைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால மற்றும் அதன் உறுப்பினர்கள்,தலவாக்கலை சபரி யாத்திரை குழுவின் குரு சுவாமி குமாரவேல் சுபாகரன், ஆகியோர் கலந்துக்கொண்டதை இங்கு காணலாம்.