இன்றைய தினம் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது அனுசரணையில் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள, கம்பஹா மாவட்டத்திலேயே இருக்கும் பிரமாண்ட தொழிற் பயிற்சி கட்டிடத்தில் இயங்கி வரும் முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கில் இல் பெண்களுக்கான சமையல் மற்றும் Hand Bag தயாரிக்கும் பாடநெறிகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்மார். அத்துடன் அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி தரங்கனீ, பாடநெறிக்கு பொறுப்பான பயிற்றுவிப்பாளர்கள் அத்துடன் முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலின் செயலாளர் பயாஸ் ஹாஜியார் உள்ளிட்ட ஏனைய நிருவாகிகள் மற்றும் ஊழியர்கள், முன்னாள் அதிபர் ஷரீப் சேர், பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர்களான அஸாம் பாஸ், ரம்ஸான் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச அமைப்பாளரான ஸறூக் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், பெருமளவிலான பெண்களும கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதி அவர்களுக்கு முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிலின் நினைவு மலரும் கையளிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.