மலையக மாணிக்கங்களான ஆசிரியப் பெருந்தகைகளுக்கு சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!


-அமைச்சர் திகாம்பரத்தின் ஆசிரியர் தினச் செய்தி-
மஸ்கெலியா நிருபர்-
லையகக் கல்வி வளர்சிக்கு உரம் சேர்த்து மாணவர்களை செதுக்குகின்ற சிற்பிகளாகவும் பெறுமதி மிக்க மாணிக்கங்களாகவும் திகழ்கின்ற ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மனமார்ந்த சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,
ஆசிரிய சமூகம் செய்து வரும் அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மலையகக் கல்வி வளர்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையால் இன்று எமது சமூகம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஆரம்ப காலத்தில் நியமனம் பெற்ற ஆசிரியைகளுக்கு இன்று பாடசாலைகளில் காணப்படும் வசதிகள் எதுவும் இருக்கவில்லை. எனினும், அவர்கள் தமது பனியின் தார்ப்பரியத்தை உணர்ந்து கடமை உணர்வோடு கற்பித்த காரணத்தால் பல பாடசாலைகள் உருவாகியுள்ளன.

இருந்தும் மலையகப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அரசியல்வாதிகளுக்கு அஞ்சிய நிலையில் தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருகின்றார்கள். இந்த நிலை மாறி ஒவ்வொரு ஆசிரியரும் சுதந்திரமாக தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதிபர் ஆசிரியர்கள் அரசியல்வாதிளுக்கு பயந்து கொண்டு தமது பாடசாலைகளின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கக் கூடாது. பாடசாலைகளுக்கு யார் உதவி செய்ய முன்வந்தாலும் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் பாடசாலைகளை வைத்துக் கொண்டு அராஜகம் புரிவதற்கும் பயமுறுத்துவதற்கும் இடமளிக்கக் கூடாது. ஆசிரிய சமூகத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையவும் அவர்கள் தமது தொழில் வான்மைகளை வளர்த்துக் கொண்டு மாணவர்களுக்கு வழி காட்டவும், மலையகம் மேலும் கல்வியில் முன்னேற்றம் காணவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -