சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய ஆங்கில ஆசிரியர் ஆரிஸ் சம்சுதீன் எழுதிய ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான "வாய்மொழி ஆங்கில பயிற்சி நூல்" அறிமுக நிகழ்வும், கல்முனை வலய பாடசாலை மாணவர்களுக்காக நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (30) வெஸ்லி உயர்தர பாடசாலை அதிபரும், கல்முனை வலய அதிபர் சங்கத் தலைவருமான வீ.பிரபாகரன் தலைமையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நூலின் பிரதியை மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மினுக்கு வழங்கி வைத்து நூலாசிரியர் ஆரிஸ் சம்சுதீனுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நூல் பற்றிய சிறப்புரை மற்றும் கருத்துக்களை கலாபூசணம் ஏ.பீர்முகம்மட் மற்றும் ஆசிரியர் அஹமட் நயிம் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



