இன்று மாலை இதற்கான நிகழ்வு இடம்பெறும் என அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, நேற்று முன்தினம் விஜேதாச ராஜபக்ஸ, ஆனந்த அளுத்கமகே, வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதற்கிணங்க, இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஐவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் முதலாவது சந்திப்பு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (30) தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
விபரம் வருமாறு
1) ஹேமசிறி பெர்னான்டோ – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2) டீ.எம்.ஏ.ஆர்.பீ. திசாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றம் சுற்றுலாத்துறை செயலாளர்
3) ஆர்.பி. ஆரியசிங்க – வௌிவிவகார அமைச்சின் செயலாளர்
4) எம்.பி. ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர்
5) கே.டி.எஸ். ருவன்சந்திர – விவசாய அமைச்சின் செயலாளர்
6) கலாநிதி பி.எம்.எஸ். பட்டகொட – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர்
7) பத்மசிறி ஜயமான்ன – கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர்
8) எச்.டி. கமல் பத்மசிறி – மாகாணசபைகள் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்
9) வி. சிவஞானசோதி – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
10) எம்.எம்.பி.கே. மாயாதுன்னே – மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
11) எஸ்.எம். மொஹமட் – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
12) எஸ். ஹெட்டிஆரச்சி – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர்
