முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு இல்லாதுவிட்டால், மு.கா எதிர்த்தரப்பு அரசியலுக்கு செல்ல வேண்டும்.


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

ன்றைய இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் தங்களது அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாய தேவையில் உள்ளார்கள்.
இந்த நிலைமையில் முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இரு தரப்பினருக்கும் அவசியம் தேவைப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் தனது சமூகம் சார்ந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்ற சந்தர்ப்பம் இதுவாகும்.
நீண்ட காலங்களுக்கு பின்பு இப்படியொரு அரசியல் பேரம்பேசும் சக்தி முஸ்லிம் காங்கிரசுக்கும், அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்ததில்லை.
தேசிய கட்சிகள் ஒவ்வொரு தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரசையும் தமிழ் தரப்பினரையும் சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்துவார்கள். தேர்தல் முடிந்தவுடன் கழட்டிவிடுவார்கள். இதுதான் கடந்தகால வரலாறு.
கடந்த காலங்களில் இதே மகிந்தவும், ரணிலும் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் மு. கா சமூக நலன் சார்ந்த எந்தவித அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை என்ற பிரச்சாரம் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது.
சிறுபான்மை கட்சிகளை பலயீனப்படுத்தி தேசிய கட்சிகளின் பக்கம் அம்மக்களை கவர்வதென்றால் இவ்வாறான பிரச்சாரத்தினைத்தான் இரு தேசிய கட்சிகளும் விரும்புகின்றது.
முஸ்லிம்களுக்கு ஆயிரத்தியெட்டு பிரச்சினைகள் இருந்தாலும், அதில் காணிப் பிரச்சினைதான் முதன்மையானது. கிழக்கு மாகானத்தின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் சிங்கள அதிகாரிகளின் அனுசரணைகளுடன் சிங்கள இனவாதிகளினால் அபகரிக்கப்பட்டது.
அதுபோல் புனிதப்பிரதேசம் என்ற ரீதியிலும், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ரீதியிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் முஸ்லிம்களின் காணிகள் பலாத்காரமாக சுவீகரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் முஸ்லிம்களின் காணிகளில் இருக்கின்ற கடற்படை முகாம் இன்னமும் அகற்றப்படவில்லை.
எனவேதான் முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகளைவிட காணிப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி தீர்வுக்கான முற்பட வேண்டும்.
இந்த அரசியல் சூழ்நிலையில் என்னதான் கோரிக்கைகளை விடுத்தாலும் அதனை நிறைவேற்றுவதாகவே இரு தரப்பாரும் கூறுவார்கள். ஆனால் அவர்களது தேவைகள் முடிந்ததும் அவைகளை மறந்துவிடுவார்கள்.

எனவே முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதுவிட்டால் எந்த தரப்பாருக்கும் ஆதரவு வழங்கவேண்டிய தேவை மு.காங்கிரசுக்கு இல்லை. அதனால் எதிர் தரப்பு வரிசையில் அமர்வதே சிறந்தது.
பதவிகளுக்காகவும், அரசியல் அதிகாரத்துக்காகவும், சலுகைகளை அனுபவிப்பதற்கும் முஸ்லிம் காங்கிரசில் ஒட்டித்திரியும் சில சுயநல விசமிகள் ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர் தரப்பில் அமர்வதற்கு விரும்பமாட்டார்கள்.
எனவே இந்த புல்லுருவிகளை புறம்தள்ளிவிட்டு முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப முஸ்லிம் காங்கிரஸ் துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டியது கடமையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -