ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்ற குழுக் கூட்டம் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நேற்று (20) சனிக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர அபிவிருத்தி, சமகால அரசியல் பிரச்சினைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.