யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் லஹுகல பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை [19.102018] லஹு கல பிரதேச செயலகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல் முஹம்மட் நசீர் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வாசித், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், காணி சம்மந்தமான உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் காணிகளை இழந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை,அக்கறைப்பற்று,ஊரணி, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் விடுவிக்கப்படாத காணிகள் சம்மந்தமாகவும் பேசப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மக்கள் தங்களின் பிரச்சினைகளை தெரியப்படுத்தியதோடு கூடிய விரைவில் தங்கள் காணிகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.மிக விரைவில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]



