முன்னாள் அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் கூறுவார் அரசியலில் சூழ்நிலைக்கேற்ப தோசை பிரட்ட தெரிந்திருக்க வேண்டும் ஆனால் எம் தமிழ் தலைவர்கள் தோசையே சுட தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என முதலைமைச்சர் சி.வி சாடியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் சூழல் அரசியலும் நில அபகரிப்பும் யுத்தத்தின் பச்சை முகம் உரை அரங்கு யாழ் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கு நேற்று(20) மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்கினை பெற்று போனவர்கள் இன்று அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள் எனவும் இவர்கள் இதற்கான அறுவடையை வெகுவிரைவில் உணர்வார்கள் எனவும் கூறினார். மேலும் ஓர் இனத்தின் இருப்பில் அதன் சூழல் முக்கிய பங்கு வகிப்பதால் அதன் இறைமையை பாதுகாப்பதற்கான வேலைகளில் எமது தமிழ் பேரவை ஆனது நடவடிக்கை எடுக்கும் எனவும் ,இம்மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் கூறினார்.