“மனித உரிமைகளுக்காக முன்னின்ற சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிப்போம்” எனும் தொனிப்பொருளில் நுவரெலியாவில் முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு

க.கிஷாந்தன்-
ர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் “மனித உரிமைகளுக்காக முன்னின்ற சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிப்போம்” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா புதிய நகர சபை மண்டபத்தில் முதியோர்களை கௌரவிக்கும் கௌரவிப்பு நிகழ்வு 05.10.2018 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது, நுவரெலியா நகரத்திலிருந்து 1000ற்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்களது உரிமைகளை கோரி சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியாக நுவரெலியா புதிய நகர சபை மண்டபம் வரை சென்றனர்.

அதனைதொடர்ந்து கலை, கலாச்சார நிகழச்சிகளுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.புஷ்பகுமார, பெரண்டினா நிறுவனத்தின் பணிப்பளார் ஜெகத் கொடகந்த, பிரதேச செயலக அதிகாரிகள், அரச சார்பற்ற அதிகாரிகள், பெருந்தோட்டங்களின் முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முதியோர்களுக்கான வைத்திய ஆலோசனைகள் வைத்திய அதிகாரி நவாஸ் ஜெப்ரி மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -