ஸகீ லதீப் இன் சர்ம நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத மருத்துவ பசைக்கு சிறந்த புத்தாக்கத்திற்கான ஜனாதிபதி விருது

எம்.பீ மொஹமட் அர்ஷாத்-
புத்தாக்கங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2018 இல், பாரம்பரிய மருத்துவ துறையில் முதலாம் இடமும், பாரம்பரிய மருத்துவ துறையில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதும் தேதிலியங்க,
இப்பாகமுவ, குருநாகலைச் சேர்ந்த எம்.டி.எம் ஸகி லதீப் சுவீகரித்துக் கொண்டார்.
இவ்விருது வழங்கும் விழாவானது தேசிய புத்தாக்க தினத்தை முன்னிட்டு இலங்கை புத்தாக்க ஆணைக்குழு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சினால் ஒக்டோபர் 26ம் திகதி பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி விருதானது புத்தாக்கம் மற்றும் புதிய உற்பத்திகளின் 14 துறைகளில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட தகுதி உடைய நடுவர்கள் குழுக்களினால் பூரணமாக பரீட்சிக்கப்பட்டு 2015
மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆக்க உரிமை (patent) சான்றுதலுக்குரிய புத்தாக்கங்களுக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கும் விருதாகும்.
குறித்த ஜனாதிபதி விருதானது இவரின் கண்டுபிடிப்பான அனைத்து விதமான சரும நோய்களையும், விசேடமாக சொறியாஸிஸ், எக்ஸிமா, சொறி, சிரங்கு, முகப்பரு தழும்புகள் மற்றும் கால் வெடிப்பு முதலான
நோய்களை பூரணமாக குணப்படுத்த இயற்கை மூலிகைகளின் மூலம் ஆயுர்வேத, சித்த, யூனானி மருத்துவ முறைக்கமைய தயாரிக்கப்பட்ட Arogya Herbal Total Skin paste எனும் வர்த்தக நாமத்தில் உள்நாட்டு வர்த்தக நிறுவகம் கொழும்பு பல்கலைக்கழகம் - ராஜகிரியவில் மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு ஆயுர்வேத திணைக்களத்தின் அனுமதியை பெற்று சந்தைப்படுத்தப்படுகின்ற தயாரிப்பாகும்.
மேலும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் தேசிய திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்வதற்கான அரச உதவிகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
குருனாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ எனும் பிரதேசத்தில் தேத்திலியங்க எனும் சிறிய கிராமத்தில் எ.எல்.எம் தரூக் மற்றும் எஸ்.எப் ஜைனூன் ஆகிய தம்பதிகளின் மூத்த புதல்வனாக எம்.டி.எம் ஸகி லதீப் (23வயது ) பிறந்தார். அவருக்கு எம்.டி.எப் ஸகீகா எனும் சகோதரியும் இருக்கிறார். அவரது 12ஆம் வயதில் தாயின் மரணத்தின் பின் தந்தையின் சகோதரியான எ.எல்.எஸ் ரஸானா வினால் வளர்க்கப்பட்டு இன்று சாதனையாளராக திகழ்கிறார்.
அவர் தனது ஆரம்ப கல்வியினை தனது கிராம பாடசாலையான மடிகே முஸ்லிம் மஹா வித்தியாலயம், முதுன்துவ, இப்பாகமுவையில் கற்றார். தற்போது College Of Health Science இல் பாரம்பரிய மருத்துவ மாணவராக கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் உதவியோடும் வழிகாட்டலோடும் Venture Engine சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச முதலீடுகளை வென்று Zacki Herbal Products Private Limited என்கிற தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்
பணிப்பாளராகவும், நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றி இவரது கண்டுபிடிப்புகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஸகீ தனது உயர்தர செயற்திட்டத்திற்கான 2011ம் ஆண்டு 16வது வயதில் அறிமுகம் செய்த புத்தாக்கமே இன்று 2018ம் அவரது 23வது வயதில் பாரிய சோதனைகள், தோல்விகள், பிரச்சினைகளை தாண்டியும் விடா முயற்சியின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க ஜனாதிபதி விருதினைப் பெற்று ஒரு கண்டுபிடிப்பிற்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் அதி உயர் விருதினை பெற்று சாதனை படைத்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -