"கல்முனை பிரதேச செயலக ஆலய விவகாரம் அடைக்கல நாதன் - ஹக்கீம் இடையில் பேச்சு. 19.10.2018 வீரகேசரி செய்தி.
கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர வளாகத்துக்குள் உள்ளது. அங்கு எந்த ஆலயமும் கிடையாது.
மேலும் அச்செய்தியில் "கல்முனை வடக்கு பிரதேச செயலகம் "என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
கல்முனையின் எந்தப் பகுதியிலும் கல்முனை வடக்கு என்ற பெயர்ப்பலகை,கடிதத்
தலைப்புடன் ஒரு பிரதேச செயலகம் இயங்கவில்லை. அப்படி ஒரு பிரதேச செயலகம் இயங்க வேண்டுமானால் அது-
1. 1992ம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்துவங்கள் கைமாறல் ( பெரும்பாக செயலாளர்கள் ) சட்டத்தின் கீழ் அந்த பிரதேச செயலகத்தின் பெயரையும், எல்லையையும் பொது நிர்வாக அமைச்சர் வர்த்தமாணியில் வெளியிட வேண்டும்.
கல்முனை வடக்கு என்றோ, தமிழ் பிரதேச செயலகம் என்றோ எந்த சந்தர்ப்பத்திலும் கெசெட் பண்ணப்பட வில்லை. சட்டப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி பாமர தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள்.
கல்முனையில் ஒரு கூரையின் கீழ் பிரதேச செயலகமும், சுமார் 250 மீட்டருக்குள் 3 நிமிட நடை தூரத்துள் வேறு கூரையின் கீழ் உப பிரதேச செயலகமாக இயங்குகிறது.
2. மேற்படி சட்டத்தின் 9ஆம் பந்தியில் உபபிரதேச செயலாளருக்கான கடமை பட்டியலை அதன் பிரதேச செயலாளர் மட்டுமே வழங்க வேண்டும், அப்படி ஒன்றும் சட்டரீதியாக வழங்கப்பட வில்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகமென சட்டப்படி இல்லாத ஒன்றை சொல்லி உபபிரதேச செயாலாளர் S.ஜெயரூபன் இயங்குகின்றார் என்றால் அதன் பிரதேச செயலாளர் யார்?
அப்பத்திரிகை செய்தியில் "ஊழியர்கள் வழிபடும் ஆலயம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
17.10.2018ல் ஆலயத்தை மறைத்திருந்த கிடுகுகளை இனந்தெரியாதோர் பிரித்து எறிந்ததாக 18.10.2018ம் திகதிய வீர கேசரியில் பிரசுரமாகியுள்ளது. அப்படி எனில் ஊழியர்கள் எப்போதிருந்து அதில் வழிபடத் துவங்கினார்கள்? முழுப் பூசணிக்காயை சோற்றுள் மறைக்கலாமா? பயங்கரவாத காலம் முதல் அவர்களது மூலதனம் பொய்தான்.
கெளரவ கல்முனை மேயர் அவர்களால், அனுமதி பெறாத கட்டுமானம் பற்றி வரி இருப்பாளரர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப் பாடுகளுக்கமைய மேற் கொள்ளப்பட்ட எழுத்து மூவமான நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததால் சட்டத்தை நாடி நீதிமன்றம் சென்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் இது தொடர்பான ஆவணங்களை 14 நாட்களுக்குள் கல்முனை உப பிரதேச செயலாளரவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சட்டப்படியான உரிய ஆவணங்களை 30.10.2018ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்தால் ஆலயம் கட்ட, இயங்க அனுமதி வழங்கப்படும்.
ஆலயம் அமைக்கப்படும் இடம் பாதையில் இருந்து 50' க்குள்தான் உள்ளது, இதற்கு வெஸ்டிங் ஓடர் இல்லை. இதை விளங்கியதால் செல்வம் அடைக்கலநாதன் பா.உ. அவர்கள் மு.கா.தலைவார் ஹக்கீமிடமும், பிரதி அமைச்சர் ஹரீசிடமும் இப்பிரச்சினையை தீர்த்து தருமாறு வேணடுகோள் விடுத்துள்ளார்.
ஹக்கீமும்,ஹரீசும் இப்பிரச்சினையை தீர்த்து தருவதாக, நடாவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள்.
சமயஸ்தலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சமய ஸ்தலங்கள் ஊடாகவே அதிகளவான இன முறுகல் உருவாகிய வரலாறு உள்ளதாகவும் இதனை தீர்த்துவைக்காவிட்டால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய இனப்பிரச்சினை ஏற்படுத்தும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் என அப்பத்திரிகைச் செய்தி தெரிவித்துள்ளது.
கல்முனை டவுண் பள்ளி நிர்வாகத்தின் கீழ் பல வருடங்களாக இருந்து சட்ட ரீதியாக செயற்படும் பள்ளிவாசலை
திருத்த,மைபூச எதற்கும் கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் விடுவதில்லை.ஆக உங்க அம்மா அம்மா, எங்க உம்மா சும்மாவா? என செல்வம் அடைக்கலநாதனிடம் இந்த இனவாத அட்டகாசத்தை பற்றிப் பேச ஹகீமுக்கும், ஹரீசுக்கும் ஏன் தொண்டை அடைத்தது?
ஆலய முறுகலால்தானாம் முன்பெல்லாம் முறுகல் வந்ததாம். காரைதீவில் முஸ்லிம்கள் அறுவடை செய்த நெல்லை எடுத்து வரும்போது வளிப்பறி கொள்ளை செய்ததும், மாவடிபள்ளி மர்கஸிலிருந்து வரும் முஸ்லிமின் தொப்பியை காரைதீவில்வைத்து களட்டியதும் அதனால் 1985ல் கலவாரம் ஆரம்பமானதும், கல்முனையை ஆறு முறை தாக்கி அளித்ததும், கல்முனை முஸ்லிம்களை கடத்தி 1990ல் கப்பம் கேட்டதும், வடமாகாண முஸ்லிம்களை துரத்தியதும் ஆலய விடயமாக உருவான இனமுறுகலா என செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்க ஹகீமுக்கும், ஹரீசுக்கும் ஏன் நா எழவில்லை. இதுதாண்டா உரிமை பேசும் நேரம். ஜும்மா பள்ளியடிய பீக்கரை வைத்து கத்தி வேலை இல்லை. கட்சி அமைத்ததும், உங்களை பாராளுமன்றம் அனுப்பியதும் இதைபற்றி பேசத்தான். கோணிய நிரப்பிக்கு பிழைக்கு கை உயர்த்த அல்ல.
ஹகீமுக்கும், ஹரீசுக்கும் ஆடைக்கல நாதன் அடைக்கலம் கொடுக்கட்டும்.
சட்டம் அதன் வேலையை செய்யும், அதைமீறி சட்டத்தை மதிக்கும் உணர்வுள்ள, தைரியமுள்ள கெளரவ மேயர் றகீப்
அவர்களை அழுத்தம் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்குமாறு ஹக்கீம் இனத்தை மறந்து செயற்பட்டால் விளைவு சாய்ந்தமருதைவிட மோசமானதாக இருக்கும்.
தமிழ் பயங்கரவாதம் முஸ்லிம்களை பதம் பார்த்ததை அடுக்கடுக்காக சொல்லி இளைஞர்களை முறுக்கேற்றி அஷ்ரப் வளர்த்த கட்சி கச்சைக்குள் அகப்பட்டு கசங்கிக் கிடக்கிறது. அதற்கு மக்கள் வழங்கிய ஆணை பெரும்பான்மை ஆட்சிக்கும், தமிழ் இனவாத அரசியல்வாதிகளுக்கும் துணை போகிறது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்கள் நக்குதின்னி புத்தியை காட்டுங்கள். யாருடைய பருப்பும் கல்முனையில் வேகாது.
கெளரவ மேயரர் றகீப் துணிச்சலுடன் செயற்பட்டு நீதிவேண்டி நிக்கின்றார். அவர் கல்முனையில் பேசு பொருளாக இருக்கின்றார். கல்முனையில் ஏசு பொருளாக இருப்பவர்கள் அவரின் செல்வாக்கில் பொறாமை கொண்டு மேற்கொள்ளும் எந்த சதி முயற்சியையும். அனுமதிக்க முடியாது.
கட்சி பேதங்களை மறந்து றக்கீபுக்கு கைகொடுப்போம்.