நாவிதன்வெளி கொளனி நிலா கொலிஜின் பரிசளிப்பு விழா சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு கொளனி நிலா கொலிஜின் பணிப்பாளர் எம்.ஐ.எம்.நிஸாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக முகாமைத்துவ சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பளருமானஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சீ.நிஸார் ஹாஜி, அமைதிப்புயல் கலை மன்றத்தின் அதிபர் ஏ.எல்.ஏ.இம்தியாஸ், அல்-ஹிறா பாடசாலையின் அதிபர் ஏ.எல்.சனூஸ், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கலை கலாச்சார மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதன்போது கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினரினால் 12ஆம் கொளனி ஜூவைத் தைக்கா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு செய்த ஆவணம் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.