அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் 50 மில்லியன் நிதியில் வாழைச்சேனை-ஓட்டமாவடி(ஹைராத்) வீதிக்கு காபட்.. (படங்கள்)

எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கடந்த வருடம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை-ஓட்டமாவடி(ஹைராத்) வீதிக்கு காபட் இடும் பணிகள் நேற்று(04) ஆரம்பிக்கப்பட்டது.
இவ் வீதியானது பல வருடங்களாக செப்பனிடப்படாது குன்றும், குழியுமாக காணப்பட்டது, இதன் காரணமாக இவ் வீதியை பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாக அசௌகரியங்களுக்குள்ளான நிலையிலேயே தற்போது இது காபட் வீதியாக மாற்றப்படுவது தொடர்பில் மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் ,அமைப்பாளர் றியாழ் அவர்களுக்கும், கட்சியின் உயர்பீட உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இஸ்மாயில் ஹாஜியார், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.எம். இம்தியாஸ் , அமைச்சரின் இணைப்பாளர் பாரூக் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் இந்த வீதியை கொண்டு வருவதில் முன்னின்று உழைத்த கட்சியின் கல்குடா தொகுதி போராளிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -