சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலய வரலாற்று சாதனை மாணவிகளை வீடு சென்று பாராட்டபட்டார்கள்.
யஹியாகான் பௌண்டசன் அமைப்பானது கடந்த காலங்களில் பல சமூக பணிகளை செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சாதனை மாணவர்களை கௌரவித்தல், வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர், இலவச மின் இணைப்பினை ஏற்படுத்தி கொடுத்தல், வறிய மாணவர்களை இனக்கண்டு அவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், வாழ்வாதார செயற்பாடுகள் இவ்வாறு பல சமூகப்பணிகளை செய்துவருகின்ற இவ்வமைப்பானது கௌரவ தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அரச தொழில் முயற்சிகள் கண்டி மாவட்ட அபிவிருத்தி பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ஒனாலி கோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ.சீ. யஹியாகான் அவர்களின் வழிகாட்டுதளுக்கமைவாகவும், தான் ஆரம்ப கல்வியினை கற்ற இப்பாடசாலையின் புகழ் சாய்ந்தமருது கோட்டத்தில் மாத்திரமல்லாமல் வரலாற்று சாதனை பதிவாகவும் தடம்பதித்த தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நான்கு மாணவிகளையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், சித்தியடைந்த சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலய வரலாற்று சாதனை மாணவிகளை அவர்களுடை வீடு சென்று பாராட்டி பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.இந்நிகழ்வின் போது இவ்வமைப்பின் செயலாளர் ஏ.சீ.எம். றியால், கொள்கை பரப்புச் செயலாளர்கலான எம்.வீ.எம்.சியாம், எம்.எம். அமான், எம்.எம். நிலாம் மற்றும் ஆலோசகர்களான யூ.எல்.எம். ரசாக் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எஸ்.எம்.ரியாஸ், எம்.எஸ்.எம். சும்ரி இன்னும் இவ்வமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.