இலங்கை இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் மெற்றோபொலிடன் கல்லூரியின் அனுசரணையில் அம்பாறை, மட்டக்களப்பு இளைஞர், யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டுச் செயலமர்வு (01) சனிக்கிழமை சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவரும், அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான இஸட்.எம்.சாஜீத் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் லங்கா அசோக்லென்ட் நிறுவனத்தின் தலைவரும், மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியும் உதவி பணிப்பாளருமான எஸ்.எம்.ஏ.லத்தீப், அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம், விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உதவி முகாமையாளரும், நுஜா ஊடக அமைப்பின் தேசியத் தவிசாளருமான றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட அம்பாறை, மட்டு இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.