#கல்முனையை #விட்டு #நகரும் #அரச #அலுவலகங்கள்


#ஜெமீல் #அகமட்-
ல்முனையில் இருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் இன்னும் சில வாரத்தில் கல்முனை நகரை விட்டு அம்பாறை நகர் நோக்கி செல்லவுள்ளதாக அறியமுடிகிறது

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்காக கல்முனையில் பல வருடமாக நகர அபிவிருத்தி அதிகார சபை தனது உப அலுவலகம் ஒன்றை அமைத்து மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளது அப்படியான அலுவலகம் அம்பாறை நகருக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள செய்தி அறிந்த கரையோர மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் கல்முனை நகரில் பல வருடமாக இயங்கி வந்த அரச அலுவலகங்கள் திட்மிட்டு அம்பாறை நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன இதனால் கரையோர மக்கள் பல சௌகரியங்களை அனுபவித்து வருவதை அம்பாறை மாவட்ட த்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதால் தான் இந்த நிலை ஏற்படுகின்றன
கிழக்கின் தலைநகர் கல்முனை அதை அழகுபடுத்துவது கல்முனையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் கடமையாக இருக்கும் போது மௌனமாக இருக்கின்ற அவர் செய்ய தெரியாத சிங்கமாக தேர்தல் காலங்களில் மட்டும் ஹக்கிமை அழகுபடுத்த மில்லியன் அபிவிருத்தி என்று மேடையில் கூறி மக்களை ஏமாற்றும் போது மக்கள் செல்வாக்கு அற்ற அவர்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் புரிந்துகொண்டு இனிமேலாவது கல்முனை நகரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதே போன்று கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியலாயமும் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யாப்பட்டது அதையும் மாணிக்கமடு சிலைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு என்று ஹரிஸ் அவர்களின் தலைவர் றவூப் ஹக்கிம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து பல வருடம் ஆனால் இன்னும் தீர்வில்லை அதே போன்று தான் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலக தளபாடங்கள் கடந்த மாதம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டதை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாவிட்டாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதிகள் கண் மூடித்தனமாக இருக்கமாட்டார்கள்

இன்று அம்பாறையில் அரசியல் அதிகாரம் குறைவாக இருந்தாலும் மக்களின் அதிக ஆதரவுடன் அம்பாறையில் மக்களுக்காக அரசியல் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை மண்ணை அழகுபடுத்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு அமைச்சர் றிசாத் ஆலோசனை கூறியுள்ளார்
கல்முனையை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில் வாழும் அரசியல்வாதிகளில் ஒருவரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் M I M அப்துல் மனாப் அவர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை உப அலுவலகம் அம்பாறை நகருக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தவர் கல்முனையை விட்டு அலுவலகம் போகக்கூடாது என்ற கொள்கையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்

கல்முனையை அழகுபடுத்திய அரச அலுவலங்கள் அம்பாறை நகருக்கு செல்வதை தடுக்க வேண்டும் என்று மாநகர உறுப்பினர் M I M மனாப் அவர்கள் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் அதனால் அமைச்சர் றிசாத் அவர்களின் உதவியுடன் கல்முனை மட்டுமல்ல கரையோர பிரதேச அரச அலுவலகங்கள் பாதுக்கப்பட்டு அழகுபடுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -