அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு புதிய உறுப்பினராக எச்.எம்.சிராஜ் தெரிவு


பி. முஹாஜிரீன்-ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக பாலமுனை 2ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம்.சிராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர் எச்.எம். சிராஜின் பெயர் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை (03) அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்ரமரத்னவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மின்ஹாஜ் வட்டாரத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று தெரிவான, அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தனது உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமாச் செய்திருந்தhர். இவரது வெற்றிடத்திற்கே பட்டியல் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த எச்.எம்.சிராஜ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகிய முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே இவ்வாறு தனது பதவியை ராஜினாமாச் செய்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஒப்புதலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரினால் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்க அறிவிக்கப்பட்டு இப்புதிய உறுப்பினருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள எச்.எம்.சிராஜ்  வியாழக்கிழமை (13) முதல் உத்தியோகபூர்வமாக சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் விடுக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -