கிழக்கு மாகாணத்தில் பிரயாணிகள் நலன் கருதியும் ,பாதுகாப்பு கருதியும் " ஹெலபொஜூன்" உணவகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எச்.எம்.உதயகுமார தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பதியத்தலாவ பகுதியில் இந்த உணவகம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் திறந்து வைக்கப்பட்டதுடன் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் புனானை
போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் கன்தளாய், மொறவெவ போன்ற இடங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த உணவகங்களை அமைப்பதற்கான நடவடிக்கையினை விவசாய அமைச்சு நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதுடன் கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த உணவகங்களை அமைப்பதற்காக 70 இலச்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன் நஞ்சுத்தன்மையற்ற உள்நாட்டு உணவுகளை சலுகை விலையில் இந்த உணவகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.