இலங்கை வாழ் முஸ்லிம்கள் பண்டைய காலம் தொட்டு இந்த நாட்டில் சமாதானம் விரும்பும் நன் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமும் இதனையே வலியுறுத்தி நிற்கிறது. ஆனால் முஸ்லிம்களின் அடிப்படை வேர் தெரியாத சில இனவாத அரக்கர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீதும், அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையிலும் தொடர்ந்தேச்சையாக சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதனை இந்த அரசு உரிய முறையில் விசாரித்து தடுத்து நிறுத்த வேண்டும்.
நாட்டில் மூவினங்களும் ஐக்கியத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதை அறவே சகித்துக்கொள்ள முடியாத, இன்பராசா-கச்சாய் குமரன் உள்ளிட்ட இனத்தின் பெயரால் வன்மங்களை தூண்டும், இரத்த வெறி தலைக்கேறிய மனித ஜந்துக்களை இலங்கை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஜெர்மன் நாட்டில் இருந்து முஸ்லிம்கள் மீது அபாண்டங்களை சுமத்தும் கச்சாய் குமரன் மீது இலங்கைக்கான ஜெர்மன் தூதரகம் ஊடாக துரிதமாக புகார் அளித்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் நல்லாட்சி அரசுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் அவசாரமாக அவசியமாக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு