திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் பதினேழு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கந்தளாய் நகர மண்டபம் இன்று(3) கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்த நிலையில் இன்னமும் திறந்து வைக்கப்படாத நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 10 ஆம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை மற்றும் கந்தளாய் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையிலே கந்தளாய் பிரதேசசபையின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று அவசரமாக கூடிய கந்தளாய் பிரதேச சபைக் கூட்டத்தின் போது பொது ஐன பெரமுன உறுப்பினர்களால் தீர்மாணிக்கப்பட்டு நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்ததும் குறீப்பிடத்தக்கது.