ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு கண்டியில் நடைபெறவுள்ள முறையில் இன்றிரவு (03) கட்சியின் உயர்பீடம் கூடியுள்ளது.
இதன்போது சபீக் ரஜாப்தீன் வகித்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு புத்தளம் நகர பிதா கே.எம். பாயிஸை நியமிக்குமாறு ஒரு உறுப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு சல சலப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென எழுந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் காரசாரமாக தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
நீங்கள் என்ன கண்ட.. கண்ட ஆட்களையெல்லாம் எடுத்துப் போடுகிறீர்கள்? ஹஸன் அலி போன்றவர்களை வெளியே போட்டு விட்டு புதிசாக வந்தவர்களுக்கும் கட்சியை விட்டு வெளியே போய் விட்டு திரும்ப வந்தவர்களுக்கும் பதவிகளை ஏன் கொடுக்கிறீர்கள் ? அம்பாறை ஆட்களுக்கு அநியாயம் செய்கிறீர்களே!’ என்று மன்சூர் எம்.பி தெரிவித்த போது, புத்தளம் நகர பிதா பாயிஸ் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் சிலர் பாயிஸை அழைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளனர்.
பின்னர் சிலர் பாயிஸை அழைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளனர்.
இந்த நிலையில் தேசிய அமைப்பாளர் பதவி மீண்டும் சபீக் ரஜாப்தீனுக்கே வழங்கப்பட்டுள்ளது. அப்போது அங்குள்ள பலர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை இழிவுபடுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மீண்டும் அந்தப் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கட்சியிலிருந்து வெளியே சென்ற முன்னாள் செயலாளர் ஹஸன் அலியை மீண்டும் கட்சிக்குள் உள்வாங்க வேண்டுமென்று மன்சூர் எம்.பி தொடர்ந்து விடாப்பிடியில் காணப்பட்டுள்ளார்.