கல்முனை மாநகர சபை திட்டமிடல் பிரிவின் தலைமை பொறியியலாளராக ஏ.எம்.சாஹிர் கடமையேற்பு..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
கர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் பேரில் அந்த அமைச்சினால் கல்முனை மற்றும் சம்மாந்துறை பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தும் பொருட்டு கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட திட்டமிடல் பிரிவின் தலைமை பொறியியலாளராக கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இத்திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இத்திட்டமிடல் பிரிவுக்கு நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இரண்டு பொறியியலாளர்களும் கல்முனை மாநகர சபையின் இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் உள்ளீர்க்கப்பட்டு, செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட திட்டமிடல் பிரிவு தொடர்பில் முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிக்கையில்;
நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் பேரில் அந்த அமைச்சினால் கல்முனை மற்றும் சம்மாந்துறை பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தும் பொருட்டு இவ்விசேட திட்டமிடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு, இன்று திங்கட்கிழமை (13) தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளது.

அரச தொழில் முயற்சி, கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த விசேட பணிப்புரையின் பிரகாரம் இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் தலைமையில் இயங்கவுள்ள இத்திட்டமிடல் பிரிவில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இரண்டு பொறியியலாளர்களும் எமது மாநகர சபையின் இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சினால் கல்முனை மற்றும் சம்மாந்துறை பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மூலோபாய நடவடிக்கைகளுடன் துரிதப்படுத்துவதுடன் எதிர்காலங்களில் நகர திட்டமிடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் தயாரித்தல், முன்னெடுத்தல் உள்ளிட்ட அனைத்து கருமங்களையும் வினைத்திறனுடன் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான விசேட இலக்குடன் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவை ஸ்தாபிப்பதற்கும் அதற்கான ஆளணியை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல் ஆகியோருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -