இன்பராசா என்பவருக்கெதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எம்.ரீ.எம்.பாரிஸ்-
வாழைச்சேனை செம்மண்ணோடைப் பிரதேசத்தைச்சேர்ந்த பாறூக் முகம்மது றியாஸ் நேற்று 27.08.2018 புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ்க்கட்சியின் தலைவரான கந்தசாமி இன்பராசா என்பவருக்கெதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் திருகோணமலை சம்பூர் 6 ம் வட்டாரத்தைச்சேர்ந்த, திருகோணமலை கன்னியா மேர்சி கிராமம் இலக்கம் 10 ல் தலைமையகத்தைக் கொண்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கடந்த 18.08.2018ம் திகதியன்று கொழும்பு 06 று.யு.சில்வா மாவத்தையின் இல. 83ஃ4 எனுமிடத்தில் ஊடகவியலாளர்களை ஒற்றுகூட்டி 'அரசிடம் சரணடைந்த விடுதலைபுலிகள் தங்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்றுள்ளனர்.

விற்கப்பட்ட ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பதனால் மற்றைய இனங்களுக்கும் இது ஆபத்தானது' என பொய்யான தகவலைக் கூறியதனூடாக ஐஊஊPசு சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் 3(2) கீழ் இனங்களினிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்திய தவறொன்றைப் புரிந்துள்ளார்.

இவ்விடத்தினைக் கருத்திற்கொண்டு கந்தசாமி இன்பராசாவுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கக்கோரி இன்றைய தினம் வாழைச்சேனைப் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்ட றியாஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பல்லின மக்கள் வாழும் நாம் நாட்டில் இவ்வாறு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களைக்கூறி, நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கெதிராக பொலீசாரும், நீதித்துறையும் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் இனங்களுக்கிடையில் அமைதியையும் சக வாழ்வினையும் விரும்பும் இளைஞர்கள் இவருக்கெராக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -